சந்திரபாபு நாயுடுவை குண்டு வைத்து கொல்ல முயற்சி: மாவோயிஸ்ட் கொல்கத்தாவில் கைது
சந்திரபாபு
நாயுடு 2003–ம் ஆண்டு ஆந்திர முதல்–மந்திரியாகஇருந்த போது அக்டோபர் மாதம்
திருப்பதி பிரமோற்சவ விழாவில் கலந்து கொண்டு விட்டு காரில் மலைப் பாதையில்
திரும்பினார். அப்போது அவரை கொல்ல கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில்
அவர் பயணம் செய்த குண்டு துளைக்காத கார் கவிழ்ந்தது. சந்திரபாபு நாயுடு
லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மாவோயிஸ்ட் இந்த தாக்குதலை நடத்தியது
தெரியவந்தது.
சந்திரபாபு
நாயுடுவை கொல்ல முயற்சி செய்த மாவோயிஸ்ட் தீபக் என்ற வெங்கடேஷ்வர ராவ்
ரெட்டி கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.