புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014

தேர்தல் அறிவிப்பின் பின்னரே வேட்பாளரை ஐ.தே.க. அறிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பிற்காக காத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்தால் அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தல் பற்றிய தீர்மானம் என்ன என்பதனையும் யார் வேட்பாளர் என்பதனையும் அறிவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்தவின் இரண்டாம் தவணைக்கான ஆட்சிக் காலம் இன்னமும் பூர்த்தியாகாத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியினால் தேர்தலுக்கு ஆயத்தமாக முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இலகுவாக வெற்றியீட்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்தவை தோற் கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளினதும் ஒத்துழைப்பு தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

ad

ad