புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் - 141 பேர் பலி தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 85 மாணவர்கள் உள்ளடங்களாக 104 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை ஆழ்ந்த இரங்கலை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கை பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மீதான இந்த தாக்குதல் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள்  முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்கள் மாலை முடிவுக்கு வந்தது.

ad

ad