புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

கடந்த 2006-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவன பங்குகள், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஏர்செல் பங்குகள் கைமாறியதற்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார். 

ஆனால், ரூ.600 கோடி வரையிலான அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மட்டுமே நிதி மந்திரிக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதற்கு மேற்பட்ட முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கமிட்டிதான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தனி கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்தது. இதன் அடிப்படையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் சமீபத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இத்தகவலை சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ப.சிதம்பரம் பேசுகையில், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்துக்கு ஒப்புதல் அளித்தது குறித்து என்னிடம் சி.பி.ஐ. ஒரு சிறிய வாக்குமூலத்தை பெற்றது. ஏற்கனவே பத்திரிகை அறிக்கையில் சொன்னதைத்தான் நான் மீண்டும் கூறினேன். அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. என்றார். 

ad

ad