வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன்;ஷிரானி பண்டாரநாயக்க
2013 ஜனவரி மாதம் முதல் என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
நான் என் நாட்டுக்காக 32 வருடங்கள் சேவை செய்துள்ளேன். இந்தக் காலப் பகுதியில் என் மீது எந்தவொரு முறைப்பாடோ குற்றச்சாட்டோ முன்வைக்கப்பட்டதில்லை.
2013 ஜனவரி மாதம் முதல் என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர். எந்தவொரு கொடுப்பனவோ ஓய்வூதியமோ வழங்கப்படவில்லை.
நான் நினைக்கிறேன் 32 வருட காலமாக மனதை ஒருநிலைப்படுத்தி நீதியின் படி நான் ஆற்றிய சேவைக்கான எனக்கு வழங்கப்படும் சேவையே இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.