புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2014

பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு
 பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் இயக்கத்தை ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து  ஐரோப்பிய யூனியன்
நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

தடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டாலும்  ஹமாஸ் இயக்கத்தின் சொத்துக்களின்  முடக்கம் 3 மாதம் தொடரும் எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
இது பற்றி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத் தீர்ப்பில்,

ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் 2001 ஆம் ஆண்டு தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டது.

ஒரு அமைப்பை தீவிர வாதப் பட்டியலில் சேர்ப்பதற்குரிய சட்டப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படவில்லை.

விதிமுறைகளின் அடிப்படையில்தான் அந்தப் பட்டியலிலிருந்து ஹமாஸ் அமைப்பின் பெயர் நீக்கப்படுகிறதே தவிர, ஹமாஸ் ஒரு தீவிரவாத  அமைப்பு அல்ல என்பது இந்தத் தீர்ப்பில் கூறப்படவில்லை.

தீவிரவாதப் பட்டியலில் இருந்து ஹமாஸ் நீக்கப்பட்டாலும், அந்த அமைப்பின் சொத்துக்கள் முடக்கம், 3 மாதங்களுக்குத் தொடரும்.

அதற்குள் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாம் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad