புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2014

சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம்: 'கத்தி' லைக்காவின் அடுத்த அவதாரம் 
தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது சர்ச்சைக்குரிய பிரிட்டனைச்
சேர்ந்த -லைக்கா- மொபைல் நிறுவனம்.
இந்த மையம் சென்னையின் மத்தியப் பகுதியில் மிகப் பெரிய அளவில் அமையவுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள பிரிட்டன்  தூதரகத்தின்  துணைத் தூதர் பரத் ஜோஷி சென்னையில்  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல -லைகா- மொபைல் நிறுவனம் அண்மையில் வெளியான தமிழ்த்  திரைப்படம் ஒன்றில்  ரூ. 100 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இந்த நிறுவனம் இப்போது மத்தியச் சென்னைப் பகுதியில் மிகப் பெரிய மருத்துவப் பரிசோதனை மையத்தை அமைக்க உள்ளது.

தமிழகத்திலுள்ள பிரபல மருத்துவமனைகளுடன் இந்த மருத்துவ ஆய்வகம் கைகோர்த்து, ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேனிங் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளும்.

வருகிற 2015 ஜூன் மாதம் இந்த மருத்துவ ஆய்வகம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக மக்கள் குறைந்த கட்டணத்தில் தரமானச் சேவையைப் பெற முடியும் என்று கூறினார்.
நடிகர் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படத்திற்கு தயாரிப்புப் பணியை மேற்கொண்டிருந்த லைக்கா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்று கூறி,  தமிழகத்தில்  அரசியல் கட்சிகள் தீவிர எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad