புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2014


அடுத்து வரும் காலங்களில் இலங்கையின் நிலை -ஒரு ஆய்வு 

இலங்கை தீவு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன.
சில வாரங்களுக்கு  முன்னர்வரை இலங்கை அரசியலில் யாராலும் வெல்லப்படமுடியாத, தனிக்காட்டு ராஜாவாக இருந்த ராஜபக்சவின் வெற்றி மெல்ல மெல்லக் கேள்விக்குறியாகிக் கொண்டு வருகின்றது.  
 
மஹிந்தவின் குடும்ப அரசியல் சதுரங்க அரங்கிலிருந்து வெளியேறிய  மைத்திரிபால சிறிசேன, எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளதனால் பலவீனமாக இருந்த எதிர்கட்சிகளின் நிலையில் மாற்றமடைந்து அரசியல் சமநிலை தோன்றியிருக்கின்றது.  
 
இதைவிட ஆளும்கட்சியிலிருந்த இன்னும் சில அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் எதிர்வரும் நாள்களில் கட்சி தாவக் காத்திருப்பதாக எதிர்க்கட்சியினரும், அதே போன்று எதிர் கட்சியிலிருந்தும் அரச தரப்புக்குப் பாய்வதற்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தயாராக உள்ளதாக ஆளுங்கட்சியினரும் சொல்லி வருகின்றனர்.
 
மஹிந்த ராஜபக்ச  ஓர் இரும்புசங்கிலி வலையமைப்புக் கொண்ட அரசையே இதுவரைகாலமும் நடத்தினார். இந்த வலையில் இனியும் சிக்கிச் சீரழியமுடியாது என்ற நிலையிலேயே  இன்று மஹிந்த அரசில் முக்கிய பங்கு வகித்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு எதிரணியுடன் இணைந்து நின்று மகிந்தரின் குடும்ப அரசியலை ஒழிக்க களத்தில் நேரடியாகவே குதித்து விட்டனர்.
 
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரகவும், சுகாதார அமைச்சருமாக அந்த கட்சியில் முக்கிய பங்கினை வகித்தவர் மைத்திரி. ஆனால் இன்று அவரே அந்தக் கட்சியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறியுள்ளார். இதற்கு ஜனாதிபதி வேட்பாளராக அவர்  அறிவிக்கப்பட்டது தான் காரணம் எனப் பல தரப்பட்டவர்களின் விமர்சிக்கின்றனர். எனினும் ஒரு குடும்பத்தின் கையில் இந்த நாடு அகப்பட்டு ஊழல் மிகுந்த ஆட்சியில் சிக்கி தவிப்பதனால் அதிலிருந்து இந்த நாட்டை மீட்பதற்காக தான் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்ததாக மைத்திரி கூறியுள்ளார்.
 
இந்த திருப்புமுனை மிக்க கட்சித்தாவலின் போது, மைத்திரி மட்டுமல்லாது அவருடன் சேர்ந்து 5 முக்கிய அமைச்சர்களும் தமது பதவியினைத் துறந்து எதிரணியில் இணைந்துள்ளார்கள். இதன் மூலம் மஹிந்தவின் ஆட்சிக்கு முண்டு கொடுத்தவர்கள் கூட இப்போது  அரசின் மீது நம்பிக்கையிழந்துள்ளார்கள் என்பதை உணரமுடிந்தது. அது மட்டுமல்லாது தாம் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம்   தேடவும் அவர்கள் முன்வந்துள்ளனர்.
 
ஆனாலும் தமிழ் மக்களின் நலனுக்காகவே தாம் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால்  தனது பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வரமுடியுமா? என்று கேட்டால் பதில் இல்லை என்பதாகவே இருக்கும். மகிந்த தோற்றால் கூட அவரை விட்டு டக்ளஸால்வெளியே  வர முடியாதளவுக்கு அரசின் வலையில் அவர் சிக்குண்டுள்ளார். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
 
புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று கூறி அப்பாவி தமிழர்களை சுட்டு படுகொலை செய்வதிலும், கடத்துவதிலும் சிங்கள படைகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் ஈ.பி.டி.பியினரே என்பது பொதுமக்களின் அசைக்க முடியாத கருத்து. அதனையே  பொது மக்கள் அண்மையில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகளில் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருந்தனர்.
அடுத்து வரும் காலங்களில் இலங்கை நிலை -ஒரு ஆய்வுக்கட்டுரை  
தலைநகர் கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனைச் சுட்டுப்  படுகொலை செய்தது ஈ.பி.டி.பியே என்று ஐக்கிய தேசியக் கட்சியும்,  மகேஸ்வரனின் மனைவி விஜயகலாவும் உறுதியாகக் கூறிவருகின்றனர். இது  ஈ.பி.டி.பியின் நடத்தை என்ற ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மட்டுமே. இது போன்று ஏராளமான படுகொலைகளுக்கு ஈ.பி.டி.பியே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. 
 
இது தவிர சூளைமேட்டுப் படுகொலை ஒன்று தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்திய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஈ.பி.டி.பி அமைப்புக்கு ஆயுதம், நிதி என்பவற்றையும் பாதுகாப்பையும் அரச தரப்பே வழங்கி வந்தது. 
 
எனவே இப்போது ஈ.பி.டி.பியினரின் உடலில் ஓடுவது அரசின் குருதியே. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தே வீணையை உதறிவிட்டு, வெற்றிலைக்குள் ஈ.பி.டி.பியைச் சங்கமிக்கச் செய்தார் மஹிந்த. அப்படி மஹிந்த சொன்னபடி வெற்றிலைக்குள் வீணையைக் கரைக்காவிட்டால், டக்ளஸின் திருகுதாளங்களை வெளியிட்டு, அவரை மீளமுடியாத சிக்கலில் மாட்டிவிடவும் மஹிந்த தயங்கி இருக்க மாட்டார். 
 
இப்போது அரசில் இருந்து வெளியேறிவர்களைப் பார்த்து  உங்களின் தில்லுமுல்லுகள் தொடர்பான பைல்கள் என்னிடமுண்டு என்று வெருட்டியதைப் போல , டக்ளஸையும் ஜனாதிபதி மிரட்டி அடக்கி வைத்திருக்கிறார் போலும்.
 
அதனால் தான் அரசில் இருந்து வெளியேறமுடியாது தவிக்கின்றார் டக்ளஸ். அதையும் மீறி வீர வசனம் பேசிக்கொண்டு 
வெளியேறினால் நாளை சிறைக்கம்பிகளுக்குள்  வாழ்நாள் முழுதையும் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அமைச்சர் டக்ளஸ்க்கு இருப்பது நியாயமான ஒன்று தானே. 
 
எப்போதும் இணக்க அரசியல் மட்டுமே செய்யத் தெரிந்த டக்ளஸ், ஒருவேளை மஹிந்த தோற்றுவிட்டால் எப்படியும் 
மைத்திரி பக்கம் சாயவே ஓடித்திரிவார். இதற்கு தன்னுடைய முன்னைநாள் எஜமானி சந்திரிகா உதவக்கூடும் என்றும் அவர் கணக்குப் போட்டிருக்கலாம். 
 
ஆனால் அதற்கு ரணிலோ, பொன்சேகாவோ உடன்படுவார்களா என்பது சந்தேகமே. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் சூத்திரக் கயிற்றை தன் கஷ்டப்படி ஆட்டுவிப்பவர் சந்திரிகா என்பதால் , டக்ளஸை தங்கள் கூட்டுக்குள் இணைக்க அவர் நினைத்துவிட்டால் அது நடந்துவிடும். இந்த நம்பிக்கையும் பொய்த்து, மஹிந்தவும் தோற்று, எதிர்க்கட்சிகளும் எட்டி உதைத்துவிட்டால், டக்ளஸினதும் அவரது கட்சியினதும் எதிர்காலம் அவ்வளவுதான். கடையை இழுத்துப் பூட்ட வேண்டியதுதான். 
 
அதனால் இந்த முறை ஜனாதிபதித் தேர்தல் மஹிந்தவின் எதிர்காலத்தை மட்டுமல்ல அமைச்சர் டக்ளஸின் எதிர்காலத்தையும் சேர்த்தே தீர்மானிக்கப் போகின்றது.

ad

ad