திட்டமிட்டப்படி வெளியாகிறது லிங்கா: ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று கூறி, மதுரையைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. 5 கோடி ரூபாயை ரொக்கப் பணமாகவும், மேலும் 5 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தையும் பிணைத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்துமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து நிபந்தனைப்படி, முதற்கட்டமாக செலுத்த வேண்டிய ரூபாய் 3 கோடியை பட தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் செலுத்தியதால், வெள்ளிக்கிழமை படம் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது. ரஜினியின் பிறந்த நாளில் லிங்கா வெளியாவதால், ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.