புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2014


விளையாட்டு வீரருக்கான உற்சாகத்தை எப்போதும் விட்டுவிடாத வைகோவை, பா.ஜ.க. தரப்பில் அளவுக்கு அதிக மாகத்தான் சீண்டிவிட் டார்களோ!?


ஆண்டின் இறுதியில் கேரளத்துக்குப் போய், ஆயுர்வேதப் பயிற்சிகள், சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு, புத்தாண்டில் தாயகத்தில் செய்தியாளர் களைச் சந்திப்பது வைகோ வின் வழக்கம். அப்போது ஊடகங்களுக்கு பரபரப் பான செய்தியைத் தரவும் செய்வார். அதைப் போல, வரும் ஜனவரி முதல் தேதியன்று பா.ஜ.க. கூட் டணி முறிவு பற்றி அறி விப்பார் என கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் பரபரப்பாகப் பேசப் பட்டது. அதற்கு முன்னர், டிச.8 உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னோட்ட மாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், பா.ஜ.க. கூட் டணியை விட்டு விலகுவ தாக இந்தக் கூட்டத்தி லேயே முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 

புதிய ஆண்டுக்கு 22 நாட்களுக்கு முன்னரே இப்படி உடனடியாக ம.தி.மு.க. முடிவெடுக்கும்படி பின்னணியில் என்ன நடந்தது?

பா.ஜ.க. அணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேற வேண்டும் என பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சாமி இணையதளத்தில் கூறியபோதும் தொடர்ந்து பகிரங்க மாகவும் சொல்லியும் பா.ஜ.க. தலைமை அதைக் கண்டிக்கவில்லை. தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை மட்டும், "அது சு.சாமியின் தனிக் கருத்து' என விளக்கம் கொடுத்தார். அந்த விவகாரம் அமுங்கிப்போக, பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா, "வைகோ தன் நாவை அடக்கவேண்டும்' என அளவுக்கு மீறி வார்த்தைகளைக் கொட்ட.. ம.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமும் ஆவேசத்தை உண்டாக்கியது. 



பிரச்னை சீரியஸ் ஆகிவிட்டதை உணர்ந்த தமிழிசை உள்பட பா.ஜ.க.வின் சில தலைவர்கள், வைகோவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். "மோடியிடம் நாங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட கூட்டணி. உங்களுக்குத் தெரியாததா? நீங்கள் உருவாக்கிய கூட்டணியிலிருந்து நீங்களே வெளியேறலாமா?' என்றெல்லாம் அவர்கள் உருக்கமாகப் பேசி னார்கள். அதே சமயத்தில்...

ad

ad