புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2014

SLMC அரசில் இருந்து வெளியேறும் நாளைக் காத்திருக்கும் ரிஷாத் அணி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேரும் நாள் எப்போது வரும் என்று காத்திருக்கிறது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு விலகினால் அமைச்சர் ரிஷாதின் மாவட்டமான வன்னியில் அமைச்சர் ரிஷாத்துக்கான ஆதரவு முற்றாக விலகி அதே கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அங்கு முன்னிலை வகிக்கும் நிலை ஏற்படும்.என்ற அச்சத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விலகும் நாளை காத்துக்குகொண்டிருக்கிறது.
அரசுக்கு ஆதரவு வழங்குவது என்று தீர்மானம் எடுத்த பின்னரும் இன்னும் தீர்மானம் எடுக்க வில்லை என்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அறிவிப்பு வேடிக்கையாக இருக்கிறது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு தவிர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசில் இருந்து விலகும் தீர்மானத்தை கடைசி வரை தாமதமாக்கலாம்.
இதனால் அமைச்சர் றிஷாத் அணியினரும் அரசுடன் இணைந்து இருக்கும் நிலைதான் ஏற்படும். கிழக்குமாகாண சபை உறுப்பினர் அமீர் அலிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கொடுத்து பிரதி அமைச்சு கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் இன்னுமொரு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பிரதி அமைச்சர் பதவியை விட்டால் வேறு வளியில்லை என்றிருக்கும் நிலையிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அரசை விட்டு விலகிச்செல்லமாட்டார் என்பது திட்டவட்டமான உண்மை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் சிலரின் பரந்த சிந்தனையாக இருப்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருக்கவேண்டும். அவசரப்படக்கூடாது, அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் பெரும் சேதத்தை உண்டாக்கி விடும் எனவே இலங்கை முஸ்லிம்களின் ஒரே ஒரு குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே இருக்கிறது என்பதனை கருத்தில் கொண்டு செயற்பட அதன் தலைமைக்கு நல்ல சிந்தனை வர்வேண்டும் என்று அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்றில் இருக்கும் அமைச்சர் அதாஉல்லா சமூகத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சற்றேனும் நேரம் போதாமல் ஓடுத்திரிபவர். எனவே அவரின் பதவியை விட்டுக்கொடுக்க அவர் விரும்பமாட்டார். அதனால் அமைச்சர் அதாஉல்லா மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் வரை அமைச்சராக இருப்பார் என்பதனால் எதிர்குரல் எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருப்பார் என்பது சத்தியமான உண்மை.
எனவே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அரசுடன் இருப்பதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாமதமாவதும் பெரும் தலைவலியைக்கொடுக்கிறது சிலருக்கு! எது எவ்வாறாயினும் மக்கள் தீர்மானத்துடன் இருக்கிறார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று..

ad

ad