புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2015

ரி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு: சுவிஸ் அரசாங்கம் உறுதி



சுவிஸ் அரசாங்கம் வரி விவகாரத்தில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலக பொருளாதார அமைப்பு நடத்தும் மாநாட்டில் பங்கேற்க இந்திய அரசின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
அங்கு அவர் சுவிஸ் நிதியமைச்சர் எவிலின் விட்மெரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பையடுத்து, சுவிஸ் அமைச்சர் கூறுகையில், இந்திய அரசின் மத்திய நிதியமைச்சருடனான இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது.
இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும், ஒத்துழைப்பு வழங்கவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
மேலும், இந்தியர்களின் கறுப்பு பண விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆனால் அனைத்தையும் வெளிப்படையாக அறிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad