புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2015

ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் டெலிகொம் தலைவராக நியமனம்


ஜனாதிபதியின் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரதுங்க சிறிசேன டெலிகொம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் கடந்த அரசாங்கங்களின் பதவிக்காலங்களில் அரசாங்க திணைக்களங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், வியாபார முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இதற்கிடையே ஜனாதிபதியின் சகோதரர் ஒருவர் அரச நிறுவனம் ஒன்றின் பொறுப்பு வாய்ந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் முன்னைய அரசாங்க காலத்தில் போலன்றி, இவர் தனது கல்வித் தகைமைகளுக்கேற்பவே டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தள்ளது.

ad

ad