புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 ஜன., 2015

பொது எதிரணி வெற்றி பெற்றால் அதிகாரிகள் தப்பிச் செல்ல தடை வேண்டும்


எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வெற்றி பெற்றால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தப்பிச் செல்லாதிருக்க வழிசெய்ய வேண்டும் என்று குடிவரவு திணைக்களத்திடம் கோருவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது எதிரணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சில அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக வெளியான தகவலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
சில அதிகாரிகள் வெளிநாட்டு தூதரகங்களிடம் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிரணியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டவர்களுக்கு எதிராக தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜித எச்சரிக்கை விடுத்துள்ளார்.