வென்னப்புவ நயனமடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொலை செய்ததாக கூறப்படும் காவலாளி ஒருவர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது
பெண் மருத்துவர் மற்றும் அவரின் கணவர் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட புதைக்கப்பட்ட செய்தி வெளியானது.
இதனையடுத்து ஆலை ஒன்றின் காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த குடும்பத்தினரை தாமே கொலை செய்ததாக குறித்த காவலாளி ஒப்புக்கொண்டதாக இன்று மாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்து கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதத்தை காட்டுவதாக பொலிஸாரை அழைத்து செல்லும் போது மாஓயா என்ற ஆற்றில் சந்தேகநபர் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொலை சம்பவங்களின் போது சந்தேகநபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவிப்பது தொடர்வது குறிப்பிடத்தக்கது.