புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2015

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் தொடர்பில் எவ்வித முன்மொழிவும் இடம்பெறவில்லை.:கணபதி கனகராஜ்

அரசாங்கம் ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும்  பெற்றுக்கொள்ளும் ஏற்றுமதி வரியை நீக்கி அந்த வருமானத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரிக்கப்படும் சம்பளத்தோடு சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கச் செய்யும் முதலாளிமார் சம்மேளனத்துடன் தோட்டத்துறை சார் தொழிற்சங்கங்கள் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் மார்ச் முப்பத்தேராம் திகதியுடன் முடிவடைவதால் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் பற்றி பேசுகின்ற அரச துறையினர் அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டிய தருணங்களில் அவர்களை மறந்துவிடுவது வழமையான நிகழ்வாகும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தின் எல்லா பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலமும் போராட்டங்களின் மூலமுமே தீர்த்து வைத்து வந்துள்ளது.
அதேபோல எதிர்வரும் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் சமர்பித்த இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அறிவித்துள்ளது.
டீசல் மண்ணென்ணெய் பெற்றோல் எரிவாயு ஆகியவற்றின் வரிகளை அகற்றி மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பள அதிகரிப்பை சிபாரிசு செய்துள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் தொடர்பில் எவ்வித முன்மொழிவும் இடம்பெற்றிருக்கவில்லை.
அரசாங்கம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் பெற்றுக்கொள்ளும் பெருமளவு வரி வருமானத்தை தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணமாக வழங்க முடியும். இதன் மூலம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரிக்கப்படவுள்ள சம்பள அதிகரிப்புடன் இந்த வரி நிவாரணத்தையும் சேர்த்து வழங்கி தோட்டத் தொழிலாளரின் சம்பளத்திற்கு அரசாங்கம் பங்களிக்க வேண்டும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ad

ad