புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2015

சிற்றுண்டி விலைகள் குறைப்பு


அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து சிற்றுண்டி உணவுகளின் விலைகளைக் குறைத்து
விற்பனை செய்ய வியாபாரிகள் முன்வந்துள்ளதாக யாழ்.வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.
 
அதன்படி யாழ்.நகரில் இயங்கும் ஏ தர உணவு நிலையங்களில் 15 ரூபாவுக்கு விற்ற தேநீர் 10 ரூபாய்க்கும், 30 ரூபா விற்ற பால் தேநீர் 25 ரூபாய்க்கும், பசுப்பால் தேநீர் 30 ரூபாவுக்கும், 20 ரூபா விற்ற சாதாரண வடை 15 ரூபாவாகவும், 30 ரூபா விற்ற பெரிய வடை 25 ரூபாவாகவும், கோதுமை மாவில் செய்த பெரிய 20 ரூபா ரொட்டி 15 ரூபாவாகவும் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன.
 
புதிய அரசு அத்தியாவசியமான பொருள்களின் விலையைக் குறைத்ததை அடுத்து சிற்றுண்டி வியாபாரிகள் யாழ்.வணிகர் கழகத்துடன் சந்தித்துக் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
 
யாழ்.நகருக்கு வெளியேயுள்ள சிறுநகர, கிராமங்களில் ஏற்கனவேயுள்ள விலையை விடவும் அவர்கள் தாமாகவே முன்வந்து விலை குறைப்பைச் செய்ய வேண்டும். விலை குறைப்பால் எல்லோரும் பயன்பெற வேண்டும்.
 
கொழும்பு இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்களிடமிருந்தே வடக்குக்கு பொருள்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. இங்கு அவை எதுவும் இல்லை. ஏனைய அத்தியாவசியப் பொருள்கள் கொழும்பில் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு விலைக்குறைப்புச் செய்யவுள்ளதாக அறிவித்ததனால் கொழும்பு இறக்குமதியாளர்கள் இறக்குமதியை நிறுத்திவிட்டனர். 
 
அதனால் இங்கு விலைக்குறைப்பு உரியமுறையில் நடைமுறைப்படுத்தவில்லை. விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்று ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார். 

ad

ad