புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2015

த.தே.கூ., ஐ.தே.க. வை இணையுமாறு மு.கா. பகிரங்க அழைப்பு! ஆட்சியை தொடர விடமாட்டோம் என்கிறது ஐதேக



கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
தற்பொழுது அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று இணைந்து செயற்பட வருமாறும் அமைச்சர் அக்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட்டாக இணைந்து செயற்பட்டது போன்று கிழக்கு மாகாணத்திலும் செயற்பட ஒன்றிணையுமாறும் அமைச்சர் மேலும் அக்கட்சிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. எனவே, மக்கள் ஆணைக்கு முரணாக அமைக்கப்பட்ட ஆட்சியை இரண்டு வாரங்களுக்குக் கூடத் தொடரவிட மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே சவால் விடுத்தார்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்ட போது மௌனியாக இருந்து கொண்டு மஹிந்த ராஜபக்ச வழங்கிய சுகபோகங்களை அனுபவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வாக்களித்தோருடன் இணைந்து ஆட்சியமைத்திருப்பது துரோகத்தனமான ஒரு செயற்பாடாகும் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ad

ad