புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2015

இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும்: மனோ கணேசன்


இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாத, சுவீகரிக்கப்படாத நிலங்கள் அனைத்தும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமேன தெளிவாக முடிவெடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்திலே வடக்கிலும் கிழக்கிலும் பெருந்தொகையான நிலம் அரசாங்கத்தாலே கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவம் தொழிலாளியாக, விவசாயியாக, மீனவனாக நிலத்தையும் மண்ணையும் கடலையும் அபகரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
அவை விடுவிக்கப்பட்டு, இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஜெனீவா தீர்மானம் மெய் நிலையும் அரசியலும் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ad

ad