இராஜதந்திர கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் படி உத்தரவு விடப்பட்டுள்ளது.
மாலபேயில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் படி கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.