புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2015

ஸ்கொட் மொரிசன், த.தே.கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்தது இராஜதந்திர முறைகளுக்கு எதிரானது!- ரணில்

முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக அவுஸ்திரேலியா அரசாங்கம் செயற்பட்டதன் காரணமே புதிய அரசியல் மாற்றம் சம்பந்தமாக மௌனம் காக்கின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவுஸ்திரேலியா பிரதமர் டொனி அப்பொட்டிற்கும் மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் உள்ள நெருக்கம் இலங்கை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவுஸ்திரேலியா ஊடகத்திற்கு அளித்துள்ள விசேட பேட்டியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை தடுத்து நிறுத்துவதில் ராஜபக்சவினரின் உதவியை பெறுவதற்காக அவர்களின் மனித உரிமை மீரல்கள் குறித்து மௌனமாக இருப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாகவும் ரணில் குற்றம் சுமத்தினார்.
முன்னைய அரசிற்கு மிக வேண்டியவர்ளே புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவியை மேற்கொண்டார்கள். இதில் பொலிஸ், இராணுவத்தினரின் ஒத்துழைப்பு இன்றி இவ்வாறான செயல்பாடுகள் சாத்தியமில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
எனினும் இலங்கையில் புதிய அரசு சட்டவிரோத படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்லும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்றும் ராஜபக்ச அரசாங்கம் அதனை செய்யவில்லை என்றும் இந்த நடவடிக்கைகள் மூலம் ஏதோ நலனைப்பெற ராஜபக்சவினர் முயன்றுள்ளனர்.
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட வேளை அப்போதைய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்பினரை சந்திக்க மறுத்ததன் மூலம் இராஜதந்திர நடைமுறைகளை பின்பற்ற தவறினார் என்றும் இதன் காரணமாக தற்போதைய குடிவரவுத்துறை அமைச்சருக்கு உரிய மரியாதை அந்த கட்சியிடமிருந்து கிடைக்காது போகலாம்.
நான் அவுஸ்திரேலியாவிற்கு எதிரானவன் அல்ல என்றும் ஆனால் அவுஸ்திரேலிய அனுபவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் வேறுசில நாடுகளும் ராஜபக்ச அரசாங்கம் மனித உரிமைகளை நசுக்கிய காலத்தில் சில சர்வதேச நாடுகள் மௌனமாக இருந்ததாகவும் பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்

ad

ad