புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுதி வெற்றி

ஆல்–இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெர்மிங்ஹாம் நகரில் நடந்து வருகிறது. இதில், லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கும் சாய்னா இதற்கு முன்பு கடந்த 2010, 2013-ம் ஆண்டுகளில் நடந்த இந்த போட்டிகளில் அரையிறுதிக்கு மட்டுமே முன்னேற முடிந்தது. 

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் சீனாவின் சன் யூ-வுடன் மோதிய சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் 50 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றார். 1980-ல் பிரகாஷ் படுகோனே, 2001-ல் கோபிசந்த்-க்கு அடுத்தபடியாக 3-வதாக இந்தியர் ஒருவர் ஆல்–இங்கிலாந்து ஓபனில் பட்டம் பெறும் வாய்ப்பை சாய்னா நேவால் பெற்றிருக்கிறார். 

ad

ad