புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

இலங்கை அரசு மீண்டும் தவறு இழைக்கக் கூடாது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஜெனிவாவில் உரை


கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட்ராட் மல் ஹுசைன் கோரியுள்ளார்.        

ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வில் நேற்று அவர் உரையாற்றும் போதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இலங்கை அதிகாரிகள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆழ்ந்த நிலையில் சிந்திக்க வேண்டும். அவர்களின் வாழ்வு நிலை உதவிகள் சரிவர ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்தபோதும் கோரிக்கைகளின் அடிப்படையில் அது செப்டெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த முடிவு, விசாரணைக் குழுவினரின் ஆலோசனைகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்திற் கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் செப்டெம்பர் மாதம் இலங்கை தொடர்பான அறிக்கை வெளிவிடப்படும். இதில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் தகவல்களும் சேர்த்துக் கொள்ளப்படும்.

இலங்கையின் அரசாங்கம், என்னையும் உண்மையை கண்டறிதல் மற்றும் நீதிக்கான விசேட நிபுணரையும் நாட்டுக்கு அழைத்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பருக்குள் எமது அதிகாரிகள் உண்மையை கண்டறிய முயற்சிப்பர் என்றும் செய்ட் தெரிவித்தார்.

மேலும் இலங்கை அரசாங்கமும் இந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் செய்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

ad

ad