புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் விநியோகம்


கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலி.தென்மேற்குப் பிரதேச சபையால் வழங்கப்படும் குடிதண்ணீர் விநியோகம் நேற்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
நேற்று முன் தினம் வியாழக்கிழமை முதல் நேற்றுக் காலைவரை வழங்கப்படா திருந்த குடிதண்ணீர் விநியோகம் நேற்று மதியத்துடன் வழமைக்குத் திரும்பியுள்ளது.
 
வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் சுதுமலை வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனால் அந்தப் பகுதிகளில் குடிதண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு வலி.தென்மேற்குப் பிரதேச சபை குடிதண்ணீர் வழங்கிவருகின்றது.
 
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை திடீரென பிரதேச சபையினால் குடிதண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மக்கள் பலத்த அசெளகரியங்களை எதிர்கொண்டனர். பிரதேச சபையின் குடிதண்ணீர் பவுசரைச் செலுத்தும் சாரதி சுகவீனம் காரணமாக வரவில்லை. இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர், நேற்றையதினம் பிரதேச சபையின் வேறு ஒரு உப அலுவலகத்திலிருந்து சாரதி ஒருவரை மாற்றி, குடிதண்ணீர் விநியோகப் பணிக்கு நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.
 
இதேவேளை, தற்போது வெயில் காலம் ஆரம்பித்துள்ளமையினால், குடிதண்ணீர் போதாமல் இருப்பதா கவும் எனவே, தாங்கிகளை கூடுத லாக வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ad

ad