புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2015

இந்திய மீனவர்கள் விடுதலை ; பொறுப்பேற்றது இந்திய துணைத்தூதரகம்


எல்லை தாண்டிவந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில்  கைது செய்யப்பட்ட 43 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 
கடந்த 27 ஆம் திகதி  இந்திய மீனவர்கள்  86 பேர் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
 
பருத்தித்துறை மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய இன்று வரை குறித்த 86 இந்திய மீனவர்களும்  தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
 
 
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் குறித்த 86 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நேற்று முன்தினம்  உத்தரவிட்டார்.
 
அதனடிப்படையில் 43 இந்திய மீனவர்களையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தி  நீதவான் மா . கணேசராசா 43 பேரையும்  விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
 
இதேபோல திருகோணமலையில் தடுத்துவைக்கப்பட்ட 43 பேரும் நீதிமன்றத்தின் ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
விடுதலை செய்யப்பட்டவர்களை இந்திய துணைத்தூதரகம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad