புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2015

தமிழர்களின் நல்வாழ்வுக்கு இருநாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் : மோடி




இலங்கையில் உள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்கு இருநாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும்
என்று பிரதமர் மோடி கூறினார்.

கொழும்புவில் இன்று இலங்கை அதிபர் சிறிசேன, இந்திய பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது,

1987க்குப் பிறகு இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்திருப்பது ஒரு வரலாற்றுப் பயணம். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், உறவை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



உறவை வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது அவசியம். தில்லியில் இருந்து கொழும்புவுக்கு நேரடியாக விமான சேவை தொடங்கப்படும். வரலாறு மற்றும் மத ரீதியாக இந்தியா - இலங்கை நாடுகள் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இலங்கை பயணிகள் இந்தியா வந்ததும் விசா வழங்கும் முறை ஏப்ரல் 14ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்

குஜராத்தில், புத்த மதத்தின் வரலாற்று எச்சங்கள் கிடைத்த இடத்தில், ஒரு அழகான புத்த கோவில் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. விரைவில் அது நிறைவேற்றப்படும். 

தமிழர்களின் நல்வாழ்விற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும். வாழ்வாதாரம், மனிதாபிமானம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தமிழக மீனவர்கள் பிரச்னை அணுகப்பட வேண்டும்
 என்று தெரிவித்தார்.

ad

ad