புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2015

இலங்கையின் உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது: ராஜீவ் காந்தியை தாக்கிய முன்னாள் சிப்பாய்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படைச் சிப்பாயான விஜித ரோகண விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் குறித்து, நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது. அவர் எமது பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி போன்று அவரும் தலையீடு செய்ய முனைந்தால், தமிழர் பிரச்சினை மீண்டும் கிளம்பும். ஆயிரக்கணக்கான இலங்கைப் படையினரும், 1500 இந்தியப் படையினரும், போரில் மரணமாகியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்துடன் மோடி உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியைப் பேண வேண்டும். போர் முடிவுக்கு வந்த பின்னர், இங்கு அமைதி நிலவுகிறது. தமிழர்கள் மீன்பிடிக்கிறார்கள், விவசாயம் செய்கிறார்கள்.
தமிழர்களின் பொருளாதாரமும், சுற்றுலாத்துறையும் நன்றாக இருக்கிறது. அவர்களுக்கு இந்திய ஆதரவு வழங்கக் கூடாது. தலையீடு செய்யக் கூடாது என்று இந்திய பிரதமரிடம் கூற வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad