புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2015

மகிந்த ராஜபக்ச இப்படியும் சம்பாதித்துள்ளார்! அதிர்ச்சி தகவல


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவிக்கு மேலதிகமாக தனிப்பட்ட வியாபாரத்தையும் நடாத்தி வந்திருப்பது இப்பொழுது வெளிவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நுகேகொடை மிரிஹான பிட்டியில் உள்ள வீட்டு பதிவு விலாசத்தில் நிறுவனம் ஒன்று நடத்தி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த நிறுவனம் ஜெஸ்மி கொன்சொலிடேடட் (Chesmi Consolidated (Pvt) Ltd) என்ற பதிவில் 175/2 பழைய கொட்டாவை வழி மிரிஹான என்ற விவசாயத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலாசம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் வசித்த வீட்டின் விலாசமாகும்.
மகிந்த ராஜபக்சவின் சகோதரியின் மகன் ஹிமால் லலிந்திர ஹெட்டி ஆராச்சி அவ் நிறுவனத்தின் இயக்குனராக செயற்பட்டுள்ளார்.
இந்த நிறுவனத்தில் இருந்து மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவிற்கு கடனாக  15,773.056  ரூபாய் 2012ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு அவர்களின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு (CSN) 25,275.000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
செஸி என்ற ஸ்தாபனத்திற்கு 9,970.133.50 ரூபாயும் இன்னும் ஒரு ஸ்தாபனமான சிலிரா சொலிஸ்சன் (Celera Solution (Pvt) Ltd) 7.708.018.11 கடனாக வழங்கியிருப்பதாகவும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வியாபாரம் வடக்கு கிழக்கு மாகாணத்தை முக்கியப்படுத்தி டயலொக் உற்பத்திகளை விநியோகிக்கும் முகவராக செயல்பட்டுள்ளது

ad

ad