புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2015

முற்றுப்புள்ளிக்கு வருகிறது எதிர்க்கட்சி தலைவர் பதவி


இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள ஊடகெமொன்று இதனை தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கம் அமைப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாரெனும் பிரச்சினை கொழுந்து விட்டு எரிகின்றது.
பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுக்கொரு நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர்களை பரிந்துரை செய்து வருகின்ற நிலையில் கட்சிகளுக்கு நீ, நான் என போட்டியும் நிலவுகின்றது.
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் யாரென அறிவிக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் எதிர்வரும் 7ம் திகதி இப்பதவிக்கு தகுதி வாய்ந்தவர் யாரென்பதை சபாநாயகர் தெரிவிக்கவுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவா?, தினேஷ் குணவர்தனவா? என்பதை தீர்மானிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை தீவிரமாக நடைபெறுகின்றது.
அத்துடன் பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒற்றுமைப்படுத்த அவசரமாக கூடி தீர்மானமொன்றை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கே வழங்க வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணிகளை நடாத்தும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

ad

ad