புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2015

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது

மஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதன்படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு மைத்திரிபால அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இது தொடர்பிலான அறிவிப்பொன்றை அண்மையில் பாராளுமன்ற அமர்வின் போதும் தெரிவித்திருந்தார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் போலியான வதந்திகளை பரப்பியிருந்தது.
இதனாலேயே குறித்த புலம்பெயர் அமைப்புக்களுக்கு கடந்த கால அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கத்தின் தவறான நிலைப்பாட்டை நீக்குவதென தீர்மானித்து தற்போதைய அரசாங்கம் இதுமாதிரியான ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே குறித்த புலம்பெயர் மற்றும் நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளமை கனடிய வாழ் தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது உலக தமிழர்கள் பேரவை இத்தடையுத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad