தலைமறைவாக இருந்த மஸ்ராத் ஆலம் பற்றி தகவல் கொடுத்தால் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்தது. கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது புதிய முதல் அமைச்சராக பதவி ஏற்ற முப்தி முகமது சயீத், சிறையில் இருந்த மஸ்ராத் ஆலமை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குப்வாரா சிறையில் இருந்து சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு பாஜக, காங்கிரஸ், சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு காஷ்மீர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் மஸ்ராத் ஆலம் கூறியதாவது, எனது விடுதலை சட்ட ரீதியானது. கடந்த 4 வருடங்களாக நான் சிறையில் இருந்தேன். நான் 6 முறை கைது செய்யப்பட்டேன். தற்போது நான் ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறேன். இந்த சட்டம் காலாவதியாகிவிடும். இதில் எந்த சிறப்பு நடவடிக்கையும் இல்லை. இது சாதாரண விடுதலைதான் என்றார்.