புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2015

வறுத்தலை விளானில் 100 குடும்பங்கள் மீளக்குடியமர முடியாமல் ஏமாற்றம்

விடுவிக்கப்பட்ட காணிகளில் 20 சதவீதத்திற்கு குறைவான நிலப் பரப்பே மக்கள் குடியிருப்புக்கள். மேலும் விடு விக்கப்பட்ட வறுத்தலை
விளானில் 46 ஏக்கரில் இராணுவத் தினர் முகாம் அமைத்துள்ளனர்.
 
இதன் காரணமாக உரும்பிராயிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 100 குடும்பங்கள் மீளக் குடியமருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் குற்றம் சுமத்தினார். 
 
வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 423 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில், மக்கள் குடியிருப்புக்கள் மிகக் குறைவானது. 
 
அண்ணளவாக 20 சதவீதத்துக்கும் குறைவானவே காணிகளே மக்கள் குடியிருப்புக்கு உரியவை. எஞ்சியவற்றில் சிறு பகுதி தோட்டக் காணிகளாகவும் அமைந்துள்ளன. 
 
வறுதலைவிளான் கிராம சேவையாளர் பிரிவில் 46 ஏக்கரில் இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். இந்த நிலப்பரப்பினுள் 100 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளடங்குகின்றன.
 
உரும்பிராயில் அமைந்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் காணிகளே இவை. அந்த மக்களின் மீள்குடியமர்வு இதனால் மறுக்கப்பட்டுள்ளது. 
 
மக்கள் அடர்த்தியாகக் குடியமர்ந்த கட்டுவன், தையிட்டி தெற்கு ஆகிய பிரதேசங்களில் சிறு துண்டுக் காணிகள் விடுவிக்கப்பட்டமையால், பெரும்பாலான மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ad

ad