
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை பந்துல குணவர்த்தனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தம்மைக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பப்பட்ட கடிதம் தமக்கு நேற்றுக் கிடைத்துள்ளதாக பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எனினும் இதற்கான காரணங்கள் எவையும் இன்னும் வெளியாகவில்லை.