புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2015

கொல்கத்தா அணியை வீழ்த்தியது பெங்களூரு 'கெயில்' சேலஞ்சர்ஸ்




டன்கார்டனில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரில் கெயிலின் அதிரடியால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கொல்கத்தா ஈடன் கார்டனில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஜோடியான ராபின் உத்தப்பா, கேப்டன் கௌதம் கம்பீர் இருவரும் தொடக்கத்திலேயே அதிரடியை ஆரம்பித்தனர். உத்தப்பா 35 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அடுத்து மணீஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்த கம்பீர் ஐபிஎல் தொடரில் தனது 25-ஆவது அரை சதத்தை நிறைவு செய்தார். 


ஆனால் 58 ரன்கள் எடுத்திருந்த போது, கம்பீர் மன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆட முயன்ற சூரிய குமார் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, சிக்ஸர் அடிக்க முயன்றபோது மன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்தார். மணீஷ் பாண்டேவும் 23 ரன்களில் ரன் அவுட்டானார். யூசுஃப் பதான்  வந்த வேகத்தில் வெளியேற கடைசி கட்டத்தில் ஆண்ட்ரூ ரசெல் பெங்களூரு பந்துவீச்சை விளாசி எடுத்தார். 17 பந்துகளை மட்டுமே சந்தித்த ரசெல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 41 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது.
178 ரன்களை வெற்றி இலக்குடன் விராட் கோலியும், கிறிஸ் கெய்லும் பெங்களூரு அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 15 பந்துகளை எதிர்கொண்ட கோலி ஒரு சிக்ஸருடன் 13 ரன்களுடன் நடையை கட்டினார். தினேஷ் கார்த்திக், மன்தீப் சிங் ஆகியோர் தலா 6 ரன்களுடன் யூசுஃப் பதனானின் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் கிறிஸ் கெயில் சிக்சர்கள் , பவுண்டரிகளை விளாசிக் கொண்டிருந்தார். போதாக்குறைக்கு தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்சும் இணைய பெங்களூரு அணியின் ஆட்டத்தில் மைதானமே அலறியது. கரியப்பா வீசிய 11-ஆவது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் விளாசிய டி வில்லியர்ஸ் அந்த ஓவரின் கடைசி பந்தில் இறங்கி அடிக்க முயன்று "ஸ்டம்பிங்' ஆனார். 16 ரன்களை கரியப்பா விட்டுக் கொடுத்தாலும் 28 ரன்களுடன் டிவில்லியர்சை வெளியேற்றிய பெருமை கரியாப்பாவுக்கு கிடைத்தது.  டி வில்லியர்சின் இந்த 28 ரன்னில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும்.

டி வில்லியர்ஸ் போனாலும் கெயல் மட்டும் நம்பிக்கை இழக்காமல் ரன்களை அதிரடியாக குவித்துக் கொண்டிருந்தார். 37 பந்துகளில் அரைசதம் அடித்த கெயில், தொடர்ந்து மின்னல் வேகத்தில் ரன் குவிக்கத் தொடங்கினார். இதற்கிடையே யூசுஃப் பதான் வீசிய 12 ஓவரில் கெயில்  கொடுத்த எளிதாக கேட்சையும் பெங்களூரு  வீரர்கள் பிடிக்கத்தவறினர். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.
கடைசி இரண்டு ஓவர்களில் பெங்களூரு  அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கெயில் 96 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராமல் ரன்அவுட் ஆனார். 7 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 96 ரன்களை கெயில் குவித்தார். கெயிலின் அபார ஆட்டத்தால் 18.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.

ad

ad