புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2015

திருப்பதி அருகே துப்பாக்கிச் சூடு - தமிழகத்தைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உள்பட 20 பேர் பலி





திருப்பதி தேவஸ்தானம் அமைந்துள்ள சேசாலம் மலைப்பகுதி சித்தூர், திருப்பதி, கடப்பா, கர்னூல், நெல்லூர் மாவட்டங்களில் உள்ளது. இந்த மலைப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் அதிகம் உள்ளன. 

இந்த செம்மரக்கட்டைகளுக்கு சீனாவிலும், தெற்காசிய நாடுகளிலும் பெரிய அளவில் கிராக்கி உள்ளது. இதனால், சர்வதேச அளவிலான ஒரு மாபியா கும்பல், செம்மரக்கட்டைகளை வெட்டி, கடத்தி கோடி கோடியாய் வருமானம் பார்த்து வருகிறது. 

எனவே செம்மரம் கடத்தல் கும்பலை அடியோடு ஒழிக்க முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. செம்மரங்களை கடத்துபவர்ளை ஒழிப்பதற்கென சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து இருக்கின்றனர். 

இவர்கள் ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பதில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிவாரி மேக் என்ற இடத்தில் ஏராளமான செம்மரக் கடத்தல்காரர்கள் பதுங்கி இருப்பதாக கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். உடனடியாக சரண் அடையும்படி கடத்தல்காரர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதற்கு மறுத்த கடத்தல்காரர்கள் கற்களையும், ஆயுதங்களையும் வீசியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

ad

ad