புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2015

ஒலிபரப்பு சேவை தொடர்பில் ஈ.பி.டி.பியின் மோசடி அம்பலம்


யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பியின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பான உண்மைகள் சமகாலத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இதே மாநகர சபையினால் யாழ்.பேருந்து நிலையத்தில் ஒலிபரப்பு சேவை ஒன்றினை ஈ.பி.டி.பியின் மகேஷ்வரி நிதியத்திற்கு சட்டத்திற்கு மாறாக வழங்கிய விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இன்றைய தினம் வடமாகாண சபையின் 27வது அமர்வு இடம்பெற்ற நிலையில் குறித்த அமர்வில் மாகாணசபை உறுப்பினர்களான பரஞ்சோதி மற்றும் விந்தன் ஆகியோர் மேற்படி ஒலிபரப்பு சேவை யாருக்கு வழங்கப்பட்டது? எவ்வாறு வழங்கப்பட்டது? என உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சரிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மாநகர சபையின் ஆட்சிக்காலம் கடந்த ஆண்டு 8ம் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், 7ம் மாதம் 31ம் திகதி 2014ம் ஆண்டு குறித்த ஒலிபரப்பு சேவையினை மகேஷ்வரி நிதியத்திற்கு வழங்குவதற்காக சபையில் ஒரு பிரேரணையை கொண்டுவந்த அதன் ஊடாக மகேஷ்வரி நிதியத்திற்கு வழங்கியமையும்,
இதற்காக மாநகர சபையின் கட்டளைச்சட்டத்தின் உபவிதிகளின் படி ஒப்பந்தம் எதனையும் செய்திருக்காமையும் தமக்கு அறிக்கை மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் மற்றும் பரஞ்சோதி ஆகியோர்,
மகேஷ்வரி நிதியம் குறித்த ஒலிபரப்பு சேவையினை குத்தகைக்கு எடுத்து மீண்டும் ஒரு உப குத்தகையினை இலங்கையின் முன்னாள் அரசுக்கு ஒத்தூதும் ஊடகத்தில் பணியாற்றும் மேல் நிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர். எனவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சபையில் சுட்டிக்காட்டினர்

ad

ad