புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2015

குமரி மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் கார், வேன், ஆட்டோக்கள் ஸ்டிரைக்


மோட்டார் வாகன சட்டத்தை மாற்றி சாலை பாதுகாப்பு மசோதா 2015 என்ற புதிய சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி கொண்டுள்ளது.

இதற்கு வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மசோதாவை அமல்படுத்தினால் ஆட்டோ, டாக்சி, வேன், லாரி போன்ற வாகனங்களை வைத்திருப்போர் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க. தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

தமிழகத்தில் இன்று ஆட்டோ, கார் மற்றும் தனியார் பஸ்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., பி.எம்.எஸ்., எல்.பி.எப். எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.

குமரி மாவட்டத்தில் 7 ஆயிரம் ஆட்டோக்கள், 3 ஆயிரம் வாடகை கார்கள் மற்றும் 2 ஆயிரம் வேன்கள் உள்ளன. இன்று காலை 6 மணி முதல் இந்த வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

வேன்கள், தனியார் பஸ்கள் அனைத்தும் அந்தந்த இடங்களில் நிறுத்தப்பட்டன. ஆட்டோக்களும் ஓடவில்லை. இந்த வேலை நிறுத்தம் காரணமாக இன்று காலை பஸ் மற்றும் ரெயில்களில் வந்த பயணிகள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அரசு பஸ்கள் மட்டுமே ஓடியதால் அதில் கூட்டம் அலைமோதியது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை, குளச்சல், கருங்கல் பகுதிகளிலும் ஆட்டோக்கள் எதுவும் ஓடாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். முதியவர்க

ad

ad