புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2015

என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது: மயூரனின் இறுதி வார்த்தைகள்


இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களை துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றி இருக்கின்றது இந்தோனேஷியா. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் மயூரனின் உறவினரான தர்மினி என்பவர் மயூரனுடைய கடைசி வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.
நான் மயூரனிடம் பேசும் போது அவன் என்னிடம் , புதிய அவென்ஜர்ஸ், பட்மன்,சுப்பர்மான், ஸ்டார் வோர்ஸ் 7, சனிக்கிழமை அன்று நடக்க இருக்கும் மேவெதர் Vs பேக்கியோ குத்துச்சண்டை குத்துச் சண்டைப் போட்டி ஆகியவற்றை பார்க்க முடியாதே என கூறி மனம் வருந்தினான்.
அவர் அப்படிச் சொல்லும் போது என் அம்மாவுக்கும், அத்தைக்கும் கண்ணீர் வழிந்தது. ஆனால் மயூரன் நகைச்சுவையாக பேசி அவர்களை சந்தோசப்படுத்தினான். மயூரன் அப்படித்தான். சுற்றியிருப்பவர்களுக்காக தன்னைப் பற்றி சிந்திக்காமல் இருப்பார்.
பின்னர் என் கையையும், என் சகோதரி கையையும் பிடித்துக்கொண்டு, 'வாழ்க்கையில் யாரும் காலையில் எழும்போதே வெற்றியுடன் எழுவதில்லை. சின்ன சின்ன வெற்றிகள் ஒன்று சேர்ந்துதான் பெரிய வெற்றியாக அமையும். இதற்காக வாழ்க்கையில் கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுடைய உழைப்பை இந்த உலகம் கவனிக்காது. தினமும் சின்ன சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையில், என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது. யாரையும் 'முடியாது' என்று சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களை, பாசிட்டிவ் எண்ணங்களாக மாற்றுங்கள்' என்று மயூரன் கூறினார். இனி தனக்கு தேவைப்படாது என்று கூறிவிட்டு , மயூரன் தன்னிடம் இருந்த சாக்லெட்டுகளை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கச் சொன்னார்.
அன்ரூ கல்யாணக் களையில் சிரித்துக்கொண்டிருந்தார். மயூரனுடன் பிரார்த்தனை செய்தபோது மயூரன், அன்ரூ உடன் கடவுள் எப்போதும் இருக்கிறார் என சொல்லிக்கொண்டே இருந்தேன். இத்தனைக்கும்பிறகு, இதுதான் எனக்குத் தோன்றுகிறது! என அவர் தெரிவித்தார்.

ad

ad