புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2015

வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்


வவுனியா வடக்கு கல்வி வலையம்  வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. 
 
வடக்கு மாகாண சபையின் 28 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் லிங்கநாதன் வவுனியா வடக்கு கல்வி வலையத்தினை கஸ்டப்பிரதேசமாக பிரகடணப்படுத்துமாறு பிரேரணையினை முன்வைத்தார். 
 
மேலும் அவர் முன்வைத்ததாவது, வவுனியா மாவட்டத்தின்  வடக்கு கல்வி வலையமானது 2 கோட்டங்களையும் 85 பாடசாலைகளையும்  8051 மாணவர்களையும்  611 ஆசிரியர்களையும் கொண்ட வலையமாகும். 
 
1988- 1989இல் இந்திய இராணுவ நடவடிக்கையில் 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையிலும்  2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திலும் மிகவும்  பாதிக்கப்பட்ட பகுதியாகும் .
 
2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம்  செய்யப்பட்டு தற்போது சிறியளவு உயர்ச்சியைக் கண்டு வருகின்றது . அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை கஸ்ரப் பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. 
 
எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும்  கிளிநொச்சி  வலையங்களைப் போல வவுனியா வடக்கு வலையத்தையும் கஸ்டப்பிரதேசமாக அறிவிக்க சபை பிரதம மந்திரிக்கு கோர வேண்டும் என அந்த பிரேரணையில் கூறப்பட்டது.
 
எனினும்  பிரதம மந்திரியிடம் இது குறித்து கோர வேண்டியது இல்லை எனவும் வடக்கு மாகாண சபையினால் வவுனியா வடக்கு வலையம் கஸ்டப்பிரதேசமாக பிரகடணப்படுத்தப்படுவதாகவும் வடக்கு மாகாண சபையே அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும்  என்றும்  சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு சபையில் பிரகடணம்  நிறைவேற்றப்பட்டது 

ad

ad