புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2015


படப்பிடிப்பின் போது நிலநடுக்கம் : நடிகர் தனுஷ் உயிர் தப்பினார் 

தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2–ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இந்த படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். முக்கியமான நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடிக்கிறார். வேல்ராஜ் டைரக்டு செய்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சுற்றுலா தளங்களில் ஒன்றான டார்ஜிலிங்கில் நடந்தது. தனுஷ், எமி ஜாக்சன், சதீஷ் ஆகிய 3 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், தனுஷ்–எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியும் அங்கு படமாக்கப்பட்டது. அனைவரும் டார்ஜிலிங்கில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்கள்.

நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டார்ஜிலிங்கிலும் உணரப்பட்டது. நடிகர்–நடிகைகள் மற்றும் படக்குழுவினர் தங்கியிருந்த ஓட்டல் கட்டிடம் குலுங்கியது.

படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓட்டலை விட்டு வெளியேறி னார்கள். இதனால் தனுஷ் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் உயிர் தப்பினார்கள். பயத்தின் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக படக்குழுவினர் அனைவரும் ஓட்டலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். இதைத்தொடர்ந்து அவசரம் அவசரமாக படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, ‘வேலையில்லா பட்டதாரி–2’ படக்குழுவினர் பாதுகாப்பாக சென்னை திரும்பினார்கள்.

ad

ad