புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2015

இன்று மே தினம்

* நாடெங்கும் ஊர்வலங்கள், கூட்டங்கள்
* நாடெங்கும் ஊர்வலங்கள், கூட்டங்கள்
ஸ்ரீல.சு.க - ஹைப்;பார்க்
ஐ.தே.க - கெம்பல் பார்க்ஜ.வி.பி - பி.ஆர்.சி

உலக தொழிலாளர் தினமான மேதினம் நாடு முழுவதும் இன்று எழுச்சியுடன் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையொட்டி கொழும்பு மாநகர் உட்பட முக்கிய நகரங்களில் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஊர்வலங்கள், கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரத்தில் மாத்திரம் 17 மேதினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் கொழும்பில் நடைபெறும் அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மே தினக் கூட்டம் திருகோணமலையிலும், மலையக தொழிற்சங்கங்களின் பிரதான கூட்டங்கள் பதுளை, ஹாலிஎல, தலவாக்கலை, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய நகரங்களிலும், ஈ.பி.டி.பியின் மேதினக் கூட்டம் பூநகரியிலும் நடைபெறவுள்ளன.
பிரதான கட்சிகளின் கூட்டங்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான மேதினக் கூட்டம் பொரள்ளை கம்பல் மைதானத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் ஹைப்பார்க் மைதானத்திலும் நடைபெறவுள்ளன. அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ஆதரவுக் குழுவினரின் மேதினக் கூட்டம் கிருலப்பனை அத்துலத்முதலி மைதானத்திலும், ஜே.வி.பியின் மேதினக் கூட்டம் பீ.ஆர்.சி மைதானத்திலும், லங்கா சமசமாஜக் கட்சியின் மேதினக் கூட்டம் குணசிங்க புரவிலும் நடைபெறவுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 5050 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ளனர். இதில் 2800 பேர் பாதுகாப்புக் கடமைகளிலும், 2250 பேர் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கடமைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மேதினக் கூட்டம் திருகோண மலையில் நடைபெறவுள்ளது. யாழ் குடாநாட்டில் கூட்டுறவுத் திணைக்களத்தின் மேதின ஊர்வலம் முத்திரைச் சந்தையில் ஆரம்பமாகவுள்ளது. வடமாகாண முதலமைச்சர், விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் இதில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்கின்றனர். ஊர்வலம் நல்லூர் வழியாக யாழ் நகரைச் சென்றடைந்து வீரசிங்கம் மண்டபத்தில் பிரதான கூட்டம் நடைபெறும். இதனைவிட புத்தூர் கலைமதி கலையரங்கில் ஒரு மேதினக் கூட்டமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் பருத்தித்துறை நடராஜர் கலையரங்கிலும், ஈ.பி.பி.டியின் மேதினக் கூட்டம் மானிப்பாய் கலாசார மண்டபம் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளிலும் நடைபெற வுள்ளன.
மலையக தொழிற்சங்கங்கள்
மலையக தொழிற்சங்கங்களின் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டம் இம்முறை தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நடைபெறுகிறது. பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டம் ஹாலிஎல பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது. விவசாய தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் பதுளை வீல்ஸ்பாக் மைதானத்திலும் நடைபெற வுள்ளது.

ad

ad