புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2015

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 2 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்த நீதிபதி குமாரசாமி



சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி 2 நிமிடங்களில் தீர்ப்பு வாசித்தார். 


ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது இன்று காலை 11 மணிக்கு தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பை வழங்கினார். சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் விரிவான தீர்ப்பு பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 2 நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார். சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்ற அறை எண் 14-க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி எடுத்துவுடன், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்று கூறினார். தொடர்ந்து அவர் தீர்ப்பை வாசிக்கையில், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வக்கீல் நிரூபிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்று கூறி 11.02 மணிக்கு தீர்ப்பை வழங்கி முடித்தார். 11.03 மணிக்கு நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார். 

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ad

ad