புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2015

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் ஆகும் முன் ஜெயலலிதா மீண்டும் முதலவராகிறார்?

ஜெயலலிதா விடுதலை ஆகி இருப்பதன் மூலம் அவ ரது அரசியல் எதிர்கால வாழ்வு மேலும் வெற்றிகரமாகவும்,
சாதனைகள் மிக்கதாகவும் மாறும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஜெயலலிதா இந்த வழக்கில் இருந்து விடுதலையானதன் மூலம் தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் நிரபராதி என்ற வெற்றியை பெற்றுள்ளார்.
அவர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருந்த தடைகள் நீங்கி விட்டன. எனவே ஜெயலலிதா விரைவில் முதல்வர் பொறுப்பை  ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி, காமராஜ், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட அமைச்சர்கள் வந்திருந்தனர். பெரும்பாலான ஆட்சி நிர்வாகிகளும் வந்து இருந்த னர்.

கர்நாடக ஹைகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்  அப்பீல் மனு தாக்கல் ஆகும் முன் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்று விடுவார் எனக் கூறப்படுகிறது. எம்எல்ஏக்கள் கூடி அவரை முதல்வராக தேர்வு செய்வர். அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாதத்தில் அவர் தேர்தலை எதிர்கொண்டு எம்எல்ஏவாக அவகாசம் உள்ளது. ஆனால், தான் மட்டும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ ஆவதற்கு பதிலாக, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ள அரசியல் லாபத்தை வைத்து சட்டமன்றத் தேர்தலையே முன் கூட்டி நடத்தி விடுவார் ஜெயலலிதா என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

ad

ad