புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2015

கனடாவில் பின் லாடனின் மகன் விடுதலை

கடந்த 13 வருடங்களாகச் சிறையில் இருந்த ''Omar Khadr'' இன்று(ஏழாந் தேதி) விடுதலை செய்யப்பட்டார். 15 வயதில் ஆப்கானிஸ்தானில் வைத்துக் கைது செய்யப்பட்டவர் அவர்.அவரது தந்தையார் பின்லாடனோடு இணைந்து செயற்பட்டவர். பின் லாடனின் குடும்ப நண்பராகவும் இருந்தவர். கனடாவில் வாழ்ந்து கொண்டிருந்த ''Omar Khadr'' ஐ தகப்பனார் கனடாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் சென்று தனது வழியில் வளர்த்து வந்திருந்தார். கனடிய மத்திய அரசு நீதிமன்றத்தில் ''Omar Khadr'' இன் விடுதலையைக் கடுமையாக எதிர்த்திருந்த பொழுதிலும் வழக்கை விசாரித்த நீதிபதி அவரை விடுதலை செய்தார். கனடிய அுந்த பொழுதிலும் வழக்கை விசாரித்த நீதிபதி அவரை விடுதலை செய்தார். கனடிய அரசு ''Omar Khadr'' இன் விடுதலையை ஆட்சேபித்து மேன் முறையீடு செய்துள்ளது. ''Omar Khadr'' மீண்டும் சமூக வாழ்வில் இணைந்து நல்ல மனிதனாக வாழத் தனக்கு ஒரு வாய்ப்புத் தருமாறு கனடிய மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். அதற்கான வாய்ப்பினை நல்குவதுதான் கனடியச் சமூகத்தின் மிகச் சிறந்த பண்பாக விளங்க முடியும். அது இறுதியில் மனித சமுதாயத்துக்கு நல்ல பலனைத்தான் ஏற்படுத்தும் என நம்புகின்றேன். கடந்த பத்து வருடங்களாக காடரின் விடுதலைக்காக உழைத்த கனடிய சட்டத்தரணி ''டெனிஸ் எட்னி''யின் உழைப்பினை என்னவென்று சொல்வது ?

ad

ad