புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2015

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு! நீதிபதி குமாரசாமி அறிவிப்பு!


ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முடிந்துள்ளது. விசாரணையை முடித்த நீதிபதி குமாரசாமி தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 

இதனிடையே திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங் முன்வைத்த வாதத்தை ஏற்கக் கூடாது என்றும், அன்பழகன் தரப்பும், கர்நாடக அரசும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வமான வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கடந்த சில நாட்களாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எழுதும் பணியை தீவிரமாக மேற்கொண்ட நிலையில், 11.05.2015 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார். 

ad

ad