புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 மே, 2015

வெலிக்கடை சிறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
சதொச நிறுவனத்திடமிருந்து ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.
நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
இதேவேளை தன்னை கைது செய்தமையானது, அடிப்படை உரிமை மீறல் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.
சதொச நிறுவனத்தில் நிதி மோசடி இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டு தன்னை கைது செய்தமையானது அநீதியான ஒரு செயலாகும் என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்