புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2015

பலாலி விமான நிலையமே இலங்கையின் பிரதான விமான நிலையம்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையமும் இலங்கையின் பிரதான விமான நிலையமாக் கப்படும். 

 
அத்துடன் திருகோண மலைத் துறைமுகமும் திருத்தப்பட்டு இலங்கையின் சிறந்த பொருளாதார வலயமாக்கப்படும். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். 
 
கிளிநொச்சி அறிவியல் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
100 நாள் காலத்திலே பெருந்தொகையான மகிழ்ச்சிகரமான முக்கியத்துவத்தைக் கொண்டு வரமுடியாத நிலைமையிலும் அந்தக் கால எல்லைக்குள் எங்கள் சமுதாயத்திற்கும் எங்கள் மக்களுக்கும் ஒரு விழிப்புணர்ச்சியைக் கொண்டு வந்திருக்கின்றோம். 
 
என்னுடைய அமைச்சின் கீழ் வடக்கு மாகாணத்தில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை உரியவர்களிடம் கையளித்திருக்கின்றோம். அதிலும் சில பிரச்சினைகள் உள்ளன அதை ஏற்றுக்கொள்கின்றேன் அதையும் நாங்கள் தீர்ப்போம். 
 
சம்பூர் பகுதியில் ஆயிரம் ஏக்கரை மக்களிடம் கையளிப்பதற்கு முன்வந்திருக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. 
 
அதுவும் மிக விரைவாக மக்களுக்குக் கொடுக்கப்படும் என்பது உறுதி. ஓர் அமைச்சர் என்றரீதியில் நான் பேசவில்லை. நான் ஒரு தமிழன் என்ற ரீதியில் தான் பேசுகின்றேன்.
 
தமிழ் மக்களுக்கான முற்போக்கான அறிவை கொண்டு வருவது தான் எங்களுடைய அவா. அந்த வகையில் முக்கியமான பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கான முதல் திட்டம், முதல்கண், முதல்கால் இதுவே. 
 
இதை வைத்து நாங்கள் வடமாகாணத்துக்கும் பொருளாதார ரீதியிலே பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து தமிழ் மக்கள் சுபீட்சமாக வாழ்க்கை நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுத்துள்ளோம்.'' என்று தெரிவித்தார்

ad

ad