புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2015

ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் சுமார் 18 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாகவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் சுமார் 18 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக அது பற்றி விசாரணைகளை
நடத்தி வரும் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் சொத்துக்களை கண்டறிய 4 நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன.
ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளில் சுமார் 18 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக இலங்கை புலனாய்வு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். இந்தளவு தொகை பணம் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியத்திலும் இல்லை.
வங்கிகளுக்கு சென்று பணத்தை எடுப்பது போல் ராஜபக்சவினர் வெளிநாடுகளில் மறைத்து வைத்துள்ள பணத்தை ஒரே தடவையில் எடுக்க முடியாது. அதனை எடுக்க நீண்டகாலம் செல்லும்.
சர்வாதிகார ஆட்சியை நடத்திய சில நாடுகளின் தலைவர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை அந்நாடுகள் தொடர்ந்தும் கண்டுபிடித்து வருகின்றன.
மொஹமட் கடாபிக்கு வெளிநாடுகளில் 80 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் உள்ளன. அவற்றில் 3.4 பில்லியன் டொலர் பெறுமதியான செத்துக்களே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் 700 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களில் 800 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துகளே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துனிசியாவின் பென் அலி வெளிநாடுகளில் பதுக்கியுள்ள 4 பில்லியன் பெறுமதியான சொத்துக்களில் 69 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனால், இது ஒரு நீண்டகால செயற்பாடு. மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டாம் என மக்கள் கூறவில்லை. தண்டனை கொடுக்குமாறு மக்கள் கூறுகின்றனர். சொத்துக்களை கண்டுபிடிப்பதில் ஏற்படும் தாமததே பிரச்சினையாக உள்ளது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மைத்திரி – மகிந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்ச வெட்கமின்றி, பிரதமர் பதவியை கேட்பதற்காக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ளார்.

ad

ad