புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2015

ஐந்து மாணவர்கள் கடத்தல்! சட்டமா அதிபர் வழக்கில் இருந்து திடீர் விலகல்
ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெறும் வழக்கு விசாரணையில் கடற்படைத் தளபதிக்கு சார்பாக சட்டமா அதிபர் ஆஜரானமைக்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவில் முதலாம் பிரதிவாதியாக கடற்படைத் தளபதியும் இரண்டாம் பிரதிவாதியாக பொலிஸ் மாஅதிபரும் மூன்றாம் பிரதிவாதியாக சட்டமா அதிபரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
மூன்று பிரதிவாதிகள் சார்பாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிச் சொலிசிடர் ஜெனரல் ஆஜராகினார். ஆனால் முதலாம் பிரதிவாதியான கடற்படைத் தளபதி சார்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிச் சொலிசிடர் ஜெனரல் தொடர்ந்தும் ஆஜராகுவதற்கு கடும் எதிப்புத் தெரிவித்து,
சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில்,
ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடற்படையைச் சேர்ந்த சம்பத் முனசிங்கவிற்கு எதிராக சான்றுகள் உள்ளதாக மனுதாரர்களின் சாட்சியாளர்களான குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியும் இந்த நீதி மன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.
பொறுப்பதிகாரிகளது சாட்சியத்தை நான் நெறிப்படுத்தியபோது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தனது சாட்சியத்தில்,
கடற்படையில் சேவையாற்றிய கமாண்டோ சம்பத் முனசிங்கவிற்கு ஐந்து மாணவர்கள் கடத்தலில் தொடர்பு உண்டென சாட்சியம் அளித்துள்ளார்.
மேலும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தனது சாட்சியத்தில் கடற்படையை சேர்ந்த கமாண்டோ சம்பத் முனசிங்க பாவித்த அறையிலிருந்து. 7.62X, 25 துப்பாக்கி ரவைகள்-300 7.62MM வெடி குண்டுகள் 105 .9X 18- 32 வெடி குண்டுகள் -32 -9MM ரக 50 வெடிகுண்டுகளுடன்,
கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, எச்.எஸ்.பி.சி வங்கி, இலங்கை வங்கிகளின் சேமிப்புப் புத்தகங்கள், காசோலைகள், காணாமல் போனவர்களின் தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுக்கள், சோனி எரிக்சன் சிம்அட்டைகள், உட்பட 21 தடயப் பொருட்களை கைப்பற்றியதாக சாட்சியமளித்துள்ளார்.
மேலும் கடத்தப்பட்ட மாணவர்களின் ஒருவரான ராஜீவ் நாகநாதனின் தாயா­ரான சரோஜா நாகநாதன் தனது சாட்சியத்தில்,
எனது ஒரே மகனையும் ஏனைய நால்வரையும் கடற்படையினரே கடத்திச் சென்றனர். இதனை எனது மகன் தொலைபேசியில் தெரிவித்தார் என சாட்சியம் அளித்ததுடன், 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை­யில் தனது மகன் தன்னுடன் தொலைபேசியில் தொட­ர்பு கொண்ட வண்ணமிருந்தாகவும்
தன்னையும் தனது நண்பர்களையும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கமாண்டர் சம்பத் முனசிங்கவும், ஹெட்டியாராச்சி உட்பட கடற்படையை சேர்ந்த நால்வரே தங்களைக் கடத்தியதாகவும் திருகோணமலை கடற்படைத் தளத்­தில் தடுத்து வைத்­­திருப்பதாகவும் கடத்தப்பட்ட தனது மகன் தொலைபேசியில் தன்னிடமும் தனது தந்தையிடமும் தெரிவித்ததாவும் சாட்சியமளித்தார்.
மேலும் தனது சாட்சியத்தில், தனது கணவரைத் தொலை­பேசியில் தொடர்பு கொண்ட அண்­ணாச்சி என்றழைக்கப்படும் சமந்த மற்றும் மொஹமட் அலி என்­பவர்கள் கடற்படையினரே தனது மகனையும் மற்றைய நான்கு இளைஞர்களையும் கட­த்­தியுள்ளதாகவும் எனது மக­னை­யும் மற்றைய இளைஞர்களையும் தங்க­ளால் விடுவிக்க முடியும் என்றும் அதற்காக ஒரு கோடி ருபா பணம் தருமாறும் கோரினர் எனவும் சாட்சியமளித்துள்ளார்.
மேலும் இந்தக் கடத்தலில் கடற்படையில் சேவையாற்றிய சம்பத் முனசிங்க மற்றும் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுகின்றன.
எனவே கடற்படையை சேர்ந்தவர்களே இந்த மாணவர்கள் கடத்தலில் தொடர்புபட்டுள்ளமை பொலிஸ் பொறுப்பதிகாரிகளனதும் மனுதாரர்களினதும் சான்றுகளினால் உறுதிப்படுத்தப்படுகின்றது. 
சந்தேக நபர்களுக்கு எதிராக சான்று காணப்படின் குற்றப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய சட்டமா அதிபர் சந்தேக நபர்களுக்கு சார்பாக ஆஜராகுவது சட்டரீதியற்ற செயல் பாடாகும்.
எனவே சட்டமா அதிபர் முதலாம் பிரதிவாதியான கடற்படைத் தளபதிக்கு ஆஜராகுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என மனுதாரர்களில் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தை முன்வைத்தார்.
அதன்பொழுது மனுதாரர்களின் ஆட்பேனை சம்பந்தமாக சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றிற்கு அறிவிக்கும்படி நீதிபதி கியான் பிலப்பிட்டிய அறிவித்திருந்த நிலையில், கடந்த தவணை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபொழுது சட்ட மாஅதிபர் சார்பாக ஆஜராகிய அரச சிரேஸ்ட சட்டத்தரணி நீதிமன்றிக்கு தெரித்ததாவது,
முதலாம் பிரதிவாதியான கடற்படைத் தளபதிக்கு ஆஜராகுவதிலிருந்து சட்டமா அதிபர் விலகிக் கொள்வதாகவும் இரண்டாம் பிரதிவாதியாக பொலிஸ் மாஅதிபருக்கும் மூன்றாம் பிரதிவாதியான சட்டமா அதிபருக்கும் மட்டுமே தான் ஆஜராகுவதாக நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியதையடுத்து,
மேலதிக விசாரணைகளை ஆடி மாதம் 10ம் திகதிக்கு ஒத்திவைத்த பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலப்பிட்டிய சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

ad

ad