பிரித்தானியாவில் கடந்த 7ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில், டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதால், கேமரூன் மீண்டும் பிரதமராக உள்ளார்.
அவர் விரைவில் ஆட்சி
அமைக்க உள்ள நிலையில், அவர் தனது புதிய அமைச்சரவையை தேர்வு செய்து வருகிறார்.
ஏற்கனவே முக்கிய துறைகளுக்கான 4 அமைச்சரவையை நியமித்துள்ள அவர், தற்போது மேலும் ஒரு பெண் எம்.பி.யை அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார்.
அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி படேல் என்ற 43 வயது பெண்மணி ஆவார். இவருக்கு வேலை வாய்ப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர் பிரித்தானியாவில் உள்ள எஸ்சக்ஸ் பகுதியில் உள்ள வித்தாம் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிதாக அமைய இருக்கும் அமைச்சரவையில், பெண்களை கேமரூன் அதிகளவில் நியமித்து வருவதன் மூலம், பழைய நடைமுறையான ஆணாதிக்கத்தை மாற்ற அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.